/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழில் பெயர் பலகை: ஆலோசனைக் கூட்டம்
/
தமிழில் பெயர் பலகை: ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 12, 2025 10:13 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் துறை ஆய்வாளர் மோதிலால், உதவி ஆய்வாளர் நுாருல்லா ஆகியோர் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான அவசியம் குறித்து பேசினர்.
வரும் மே 31ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
அப்போது, வர்த்தகர் சங்க செயலர் மணிவண்ணன் குறுக்கிட்டு, பெயர் பலகையில் எழுத்துக்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஆய்வாளர், 'பெயர் பலகையில், தமிழ் 5 மடங்கு, ஆங்கிலம் 3மடங்கு, விருப்ப மொழி 2 மடங்கு என 5; 3; 2 என்ற விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்' என்றார்.
துப்புரவு அலுவலர் சக்திவேல், நகரமைப்பு அலுவலர் செல்வம், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தமிழ்வாணன், சேட்டு முகம்மது உட்பட பலர் பங்கேற்றனர்.

