ADDED : ஆக 16, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரத்தில் ஸ்ரீ நாராயணா நிதி நிறுவனம் இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது.
சிதம்பரம், வடக்கு வீதியில் ஸ்ரீ நாராயணா நிதி நிறுவனத்தின் சிதம்பர கிளை இயங்கி வந்தது. இக்கிளை கீழ வீதியில் இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது.
முதுநிலை ஆலோசகர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். மனிதவள மேம்பாட்டு அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர் மூத்த வழக்கறிஞர் ராமதாஸ், புதிய கிளையை திறந்து வைத்தார். ராஜரத்தின தீட்சிதர் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்தார். விழாவில், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வணிக மேலாளர் மகாதேவன் நன்றி கூறினார்.