/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 15, 2024 04:37 AM

கடலுார்: கடலுார் டவுன்ஹால் அருகே, தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடந்த ஊர்வலத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் பேசுகையில், ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் கல்வியுடன் விளையாட்டையும் கற்க வேண்டும். கல்வி அறிவாற்றலுக்கு உதவுகிறது என்றால் விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக குழந்தைகள் உதவி எண் 1098 அல்லது அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர், குழந்தைகள் நலக்குழு தலைவர் லட்சுமி வீரராகவலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.