/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய நுகர்வோர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய நுகர்வோர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 20, 2024 11:20 PM

விருத்தாசலம்: தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், மூத்த பேராசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். மன்ற பொறுப்பாளர் முத்தழகி வரவேற்றார்.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை சுமந்தபடி பஸ் நிலையம், பாலக்கரை வழியாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் ெஹலன் ரூத் ஜாய்ஸ், தமிழ்வேல் உடனிருந்தனர்.