/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய பேரிடர் மீட்பு படை கடலுார் வருகை
/
தேசிய பேரிடர் மீட்பு படை கடலுார் வருகை
ADDED : ஜன 11, 2026 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் சுதாகர் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர் கடலுார் வந்துள்ளனர். இவர்கள் கடலுாரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

