/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., சார்பில் தேசியக்கொடி பேரணி
/
பா.ஜ., சார்பில் தேசியக்கொடி பேரணி
ADDED : மே 22, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் பா.ஜ., சார்பில் சிந்துார் ஆப்பரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.
புவனகிரி பாலக்கரை அருகில் துவங்கிய பேரணிக்கு மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராகேஷ் தலைமை தாங்கினார்.
முன்னாள் பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வெற்றிவேல், நிர்வாகிகள் லட்சுமி நரசிம்மன், ஆளவந்தார் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் திருமாவளவன் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பாலக்கரையில் முடிந்தது. பேரணியில் வழக்கறிஞர் கேசவன், மகளிரணி சாந்தலட்சுமி, வள்ளி, பழனியம்மாள், வசந்தி நிர்வாகிகள் நாகராஜன், கனகராஜன், பழனியப்பன், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.