/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
/
மாவட்டத்தில் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
ADDED : நவ 29, 2024 04:28 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் வரும் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
இதில், நீதிமன்றங்ளில் நிலுவையில் உள்ள சிவில், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி, குடும்ப நலன், தொழிலாளர் நலன் ஆகியவை சார்ந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கிக் கடன் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்களும், வழக்காடிகளும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலமாக அந்தந்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.