ADDED : செப் 27, 2026 06:13 PM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் என்.எல்.சி.,மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் வேப்பங்குறிச்சியில் நடந்தது.
மந்தாரக்குப்பம் அடுத்த வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு என்.எல்.சி., பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) மெர்சிமேக்டலின் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஞானதீர்த்தம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக என்.எல்.சி., பள்ளி கல்வி துறை செயலாளர் பிரபாகரன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இம்முகாமில் மாணவர்கள் கிராம சுற்றுப்புற துாய்மை,பெண் கல்வி ஊக்குவித்தல்,டெங்கு ஒழிப்பு , புகையிலை எதிர்ப்பு ,நெகிழி ஒழிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்
கல்வி மற்றும் விளையாட்டு துறை கூடுதல் தலைமை மேலாளர் அருள், தலைமை மேலாளர் அரவிந்த்பாபு, வேப்பங்குறிச்சி பள்ளி தலைமையாசிரியர் பரிமளா, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதுகலை ஆசிரியர் சத்யராஜ் நன்றி கூறினார்.
