/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதிரிக்குப்பத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
/
பாதிரிக்குப்பத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
ADDED : அக் 08, 2025 12:38 AM

கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் பங் கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாம், பாதிரிக் குப்பம் அரசு உதவி பெறும் குலோரி ஆரம்ப பள்ளி வளாகத்தில் நடந்தது.
லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி னார். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொ டர்பு அலுவலர் சுந்தரராஜன், முகாமை துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரியம் சேகர், எழில், உதவி பொறியாளர் செந்தில்குமரன் பங்கேற்று மின் சிக்கனம், நுகர்வோர் பாது காப்பு குறித்து பேசினர்.
3ம் நாள் நிகழ்ச்சியில், கராத்தே பயிற்சியாளர் கிருஷ்ணன், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பேசினார்.
4ம் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளர் வேலுமணி பேசினார்.
விதை வங்கி நிறுவனர் சங்கர், யோகா மாஸ்டர் வெற்றி பேசினர். மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. முகாமில் பங்கேற்ற 25 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் தியாகு நன்றி கூறினார்.