/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயற்கை உணவு திருவிழா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
இயற்கை உணவு திருவிழா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 11, 2024 05:39 AM

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -4ல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.
இயற்கை சார்ந்த நாட்டுக் காய்கறி விதைகள், கீரை வகைகள், சிறுதானியங்கள், மரபு வகை நெல்கள், நாட்டு மாட்டு சாணத்தால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விபூதிகள், சாம்பிராணிகள், வத்திகள், காய்கறி விதைகள், மூலிகை சார்ந்த பற்பொடிகள், குளியல் பொடி, சத்துமாவு வகைகள், பழச்சாறுகள், நாட்டு சக்கரைகள், நவதானிய பருப்பு வகைகள், இயற்கை உரங்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சூரணங்கள், இயற்கை ஹேர் டை ஆயில், மரக்கன்றுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.
மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களின் இயற்கை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
உணவு திருவிழாவை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் என்.எல்.சி., ஊழியர்கள் குடும்பத்துடன் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.