ADDED : மார் 12, 2024 05:18 AM

அ நிறம் | அளவு
சிறுபாக்கம், : சிறுபாக்கம் அடுத்த அடரி கலைமகள் மெட்ரிக் பள்ளியில் இயற்கை மருத்துவ முகாம் நடந்தது.
சிறுபாக்கம் அடுத்த அடரி கலைமகள் மெட்ரிக் பள்ளி மற்றும் கும்பகோணம் அன்னை கல்லுாரி இணைந்து இயற்கை மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. அடரி கலைமகள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.
முதல்வர்கள் பிரேமா, ஹேமலதா முன்னிலை வகித்தனர். அன்னை கல்லூரி யோகா மருத்துவர் கார்த்திகா, நிவேதா, விஜயலட்சுமி, உமா சிகிச்சை அளித்தனர்.
தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் சௌந்தரராஜன், சுப்ரமணியன், சஜி கிளிட்டஸ், ஜெயகாந்த, ஊராட்சி தலைவர் அனிதா கமல்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், யோகா பயிற்சி செய்யும் முறைகள், அக்குபஞ்சர் சிகிச்சைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
