/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
ADDED : மார் 14, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாஸ்டர் அகாடமி சார்பில் பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை மற்றும் நாட்டியாஞ்சலி விழா நடந்தது.
நிகழ்ச்சியை, கோவில் செயல் அலுவலர் மாலா துவக்கி வைத்தார். பயிற்சியாளர்கள் வகிதா பானு, பாபு ஆகியோர் தலைமையில் பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை நடந்தது.
தொடர்ந்து விநாயகர், முருகன், விருத்தகிரீஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் சுவாமிகளை போற்றும் வகையில் பரத நாட்டிங்கள் இடம் பெற்றன.
தொடர்ந்து, சலங்கை பூஜை மற்றும் நாட்டியாஞ்சலியில் பங்கேற்ற மாணவிகளுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

