ADDED : அக் 07, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நவராத்திரி விழாவையொட்டி, சிவனடியார்களின் கொலு பூஜை நடந்தது.
விருத்தாசலம் ராஜவேல் வீதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பூஜை நடந்தது.
பழமலைநாதர் திருக்கோவில் அர்த்தஜாம அடியார் திருக்கூட்டத்தினர் பங்கேற்று, திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
கொலுவில் சுவாமி சிலைகள், பழங்கள், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் இருந்தன. பக்தர்கள், சிவனடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.