/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடராஜர் கோவிலில் நாயன்மார்கள் வீதியுலா
/
நடராஜர் கோவிலில் நாயன்மார்கள் வீதியுலா
ADDED : ஜூன் 02, 2025 12:09 AM

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைகாசி பூசம் சேக்கிழார் விழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைகாசி மாத பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை தேவ சபையில் இருந்து 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடிகள் தனிதனியாக, 19 மஞ்சங்களிலும், பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி அம்பாள், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யஸ்வாமி மயில் வாகனத்திலும் எழுந்தருளினர்.
பின், நான்கு வீதிகளிலும் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, கால பூஜையின் போது சேக்கிழார் சுவாமிகள் மற்றும் நமிநந்தி அடிகள் நாயனார் சித்சபை முன்பு எழுந்தருளச் செய்து, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.