ADDED : மார் 15, 2026 03:55 AM

கடலுார்: கடலுாரில், தே.ஜ., கூட்டணி செயல் வீரர்கள், வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார். மருத்துவரணி தலைவர் சீனுவாச ராஜா, மீனவரணி இணைசெயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ண மூர்த்தி, பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், தாமரைக்கண்ணன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, த.மா.கா., மாவட்ட தலைவர்கள் ஞானசந்திரன், முகேஷ், இந்திய ஜனநாயக கட்சியின் ஜெகத்ரட்சகன் ஆகியோர் பேசினர்.
பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநகர தலைவர் பிரவீன்குமார், பா.ம.க., தட்சணாமூர்த்தி, மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், வினோத்ராஜ், தெய்வபக்கிரி, செயலாளர் பிரித்விராஜ், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா, நகர செயலாளர் மோகன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், பேரூராட்சி செயலாளர் அர்ஜூனன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு , ஜெ., பேரவை கனகராஜ், மகளிர் அணி சாந்தி, செயலாளர் பாலகிருஷ்ணன், மீனவர் பிரிவு செயலாளர் குப்புராஜ், வரதராஜன், தமிழ்செல்வன், ஏழுமலை, வடக்கு ஒன்றிய துணைசெயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம் நன்றி கூறினர்.
