ADDED : டிச 26, 2024 07:16 AM

மந்தாரக்குப்பம் : நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், அலன் நீட் மற்றும் ஜே.இ.இ., படிப்பிற்கான தொடக்க விழா மற்றும் பயிற்சி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஜெயப்பரியா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர் குத்துவிளக்கேற்றி, அலன் நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சியின் முக்கியவத்துவம் குறித்து பேசினார். ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும இயக்குநர் தினேஷ் மாணவர்களுக்கு சிறு வயது முதலே நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சிக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்வில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பெற்றோர் ஏராளமனோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

