/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்கால் துார்வாரும் பணியில் அலட்சியம் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

ADDED : செப் 30, 2025 07:58 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே மானம்பார்த்தான் வாய்க்காலில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூரில் மானம்பார்த்தான் வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மிராளூர், மஞ்சக்கொல்லை, புவனகிரி, புதுச்சத்திரம், அரியகோஷ்டி கிராம விவசாயிகள் சம்பா பருவத்திற்கு பாசன வசதி பெறுகின்றனர்.
வாய்க்கால் துார்வாராமல் உள்ளதால் ஆகாயத்தாமரை செடிகள் வளரந்து புதர்மண்டி காணப்படுகிறது. விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகளை துவங்கியுள்ள நிலையில், வாய்க்கால் புதர்மண்டி காணப்படுவதால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுகிறது. கோடையில் பெயரளவில் மட்டுமே துார்வாரப்பட்டது. இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவில் புதர்மண்டி காணப்படுகிறது.
எனவே, பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.