ADDED : நவ 15, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை சேர்மன் ராம்குமார் தலைமை தாங்கினார். காங்., மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் வரவேற்றார். முன்னாள் நகர தலைவர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், மாசிலாமணி, மகளிர் அணி அருள்ஜோதி முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலா ளர் சேரன், நேரு படத்திற்கு மாலை அணிவித்தார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் நடராஜன், ராமலிங்கம், குமார், மனோகர், ஜாபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகர செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.