ADDED : ஆக 27, 2026 07:02 PM
நெல்லிக்குப்பம், ஆக. 28 நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லிக்குப்பத்தில் முற்போக்கு இளைஞர் மற்றும் மகளிர் முன்னணி சார்பில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கடந்த 22 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக அனுமதி கேட்டு நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணியிடம் மனு அளித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் அனுமதி மறுத்துவிட்டார். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி போலீஸ் தடையை மீறி முற்போக்கு இளைஞர் மற்றும் மகளிர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி இன்ஸ்பெக்டர் வேலுமணி அதிரடியாக ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பிரச்னையில் மாற்றப்பட்டாரா அல்லது வேறு காரணமா என தெரியாமல் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
