/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகரமன்ற கூட்டம் நடத்தப்படுமா நெல்லிக்குப்பம் கவுன்சிலர் அதிருப்தி
/
நகரமன்ற கூட்டம் நடத்தப்படுமா நெல்லிக்குப்பம் கவுன்சிலர் அதிருப்தி
நகரமன்ற கூட்டம் நடத்தப்படுமா நெல்லிக்குப்பம் கவுன்சிலர் அதிருப்தி
நகரமன்ற கூட்டம் நடத்தப்படுமா நெல்லிக்குப்பம் கவுன்சிலர் அதிருப்தி
ADDED : ஜன 29, 2025 07:01 AM
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று 6 மாதம் தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை நகரமன்ற கூட்டம் நடந்தது.சில மாதங்களில் இரண்டு முறை கூட கூட்டம் நடந்தது.
அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி கடைசியாக கூட்டம் நடந்தது.நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை.
இதுபற்றி கவுன்சிலர்கள் கூறியதாவது கடந்த 2 மாதமாக கூட்டம் நடக்கவில்லை.டிசம்பர் மாதம் இரண்டு தீர்மானங்களை மட்டும் கொண்டு வந்து அவசர கூட்டம் நடத்தினர்.
அவசர கூட்டம் என்பதால் அதில் வந்த தீர்மானங்களை மட்டுமே விவாதிக்க வேண்டுமென்பதால் மற்ற பிரச்னைகளை பேசமுடியவில்லை.
சாதாரண கூட்டம் நடக்காததால் மக்கள் பிரச்னைகளை கூற முடியவில்லை. வெள்ளம் நிவாரணம், நகராட்சிக்கு சொந்தமான தேக்கு மரம் திருட்டு, பணியிடங்கள் காலியாக உள்ளது, புதிய வாகனங்கள் பயன்படுத்தாமல் இருப்பது உட்பட பல மக்கள் பிரச்னைகளை விவாதிக்க வேண்டியுள்ளதால் இந்த மாதம் சாதாரண கூட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டுமென கூறினர்.
மக்கள் பிரச்னைகளை பேசமுடியாததால் கவுன்சிலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கவுன்சிலர்கள் கமிஷனர் கிருஷ்ணராஜனை சந்தித்து உடனடியாக நகரமன்ற கூட்டத்தை நடத்த வேண்டுமென கூறினர்.
இல்லையோல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து சென்றனர்.

