/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரி செலுத்தாத 2 கடைகளுக்கு 'சீல்' நெல்லிக்குப்பம் நகராட்சி அதிரடி
/
வரி செலுத்தாத 2 கடைகளுக்கு 'சீல்' நெல்லிக்குப்பம் நகராட்சி அதிரடி
வரி செலுத்தாத 2 கடைகளுக்கு 'சீல்' நெல்லிக்குப்பம் நகராட்சி அதிரடி
வரி செலுத்தாத 2 கடைகளுக்கு 'சீல்' நெல்லிக்குப்பம் நகராட்சி அதிரடி
ADDED : பிப் 02, 2025 06:29 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு வரி செலுத்தாத 2 கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக 'சீல' வைத்தனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் வரும் வருவாய் ஆண்டு முடிவான மார்ச் 31ம் தேதிக்குள் 100 சதவீதம் வரி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுவரை போதிய வரி வசூல் நடக்கவில்லை. இதனால் அனைத்து அதிகாரிகளும் தினமும் நேரடியாக மக்களை சந்தித்து உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலாளர் சரவணன் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் அதிகாரிகள் மக்களை சந்தித்து வரி செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர்.
இதுபற்றி கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகையில், 'மார்ச் 31ம் தேதிக்குள் நிலுவை இல்லாமல் வரியை செலுத்தி அத்தியாவசிய பணிகள் செய்ய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். வரி கட்டத் தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு,சொத்து ஜப்தி, நகராட்சி கடைகளுக்கு 'சீல்' வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவற்றை தவிர்க்க உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும்.100 சதவீதம் வரி வசூல் நடந்தால் அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். இதன் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அதிகளவு செய்ய முடியும்' என்றார்.
இந்நிலையில் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் நீண்ட நாட்கள் வரி செலுத்தாத இறைச்சி கடை மற்றும் பஸ் நிலையத்தில் ஒரு கடை என 2 கடைகளை அதிகாரிகள் பூட்டி 'சீல' வைத்தனர்.