/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் போலீசில் காதல் தம்பதி தஞ்சம்
/
நெல்லிக்குப்பம் போலீசில் காதல் தம்பதி தஞ்சம்
ADDED : நவ 03, 2024 04:44 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மோரை மேட்டுத் தெருவை சேர்ந்த பாபு மகன் விஜய், 25. நெல்லிக்குப்பத்தில் ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லுாரியில் படித்து வந்த தேவனாதன் மகள் ஜெயலட்சுமி,19; யை காதலித்துள்ளார். இதையறிந்த ஜெயலட்சுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல், மயிலம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஜெயலட்சுமியை அவரது பெற்றோர் தேடி வந்ததால் நேற்று காலை விஜய் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு, நெல்லிக்குப்பம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இரு வீட்டு குடும்பத்தாரை வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பினார்.