/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க நெல்லிக்குப்பம் மாணவிகள் தேர்வு
/
தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க நெல்லிக்குப்பம் மாணவிகள் தேர்வு
தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க நெல்லிக்குப்பம் மாணவிகள் தேர்வு
தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க நெல்லிக்குப்பம் மாணவிகள் தேர்வு
ADDED : நவ 21, 2024 05:58 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் சிவராஜ் என்பவர், நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளி மைதானத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஹாக்கி பயிற்சி கொடுத்து வருகிறார். 30க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.
இங்கு பயிற்சி பெறும் கோபிகா, ஓவியா, சாலியா, பிரதீபா, அகஸ்தியா, சுஸ்மிதா ஆகியோர் சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை போட்டியில் இரண்டு அணிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் பெற்றனர்.
கோபிகா, வான்மதி ஆகியோர் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர். மேலும் இங்கு பயிற்சி பெறும்அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணி திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை ஆர்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டி பரிசு வழங்கினார்.