/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் புதிய பஸ்கள்; அமைச்சர் துவக்கி வைப்பு
/
விருதையில் புதிய பஸ்கள்; அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஏப் 15, 2025 06:35 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் இருந்து புதிய அரசு பஸ்களை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து திட்டக்குடி, நல்லுார், சேத்தியாதோப்பு, கருங்குழி, டி.பவழங்குடி வழித்தடங்களில் மகளிர் விடியல் பயணம் மற்றும் கிளாம்பாக்கத்திற்கு இரண்டு புதிய அரசு பஸ்கள் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகர துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர். போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ராகவன் வரவேற்றார்.
புதிய அரசு பஸ்களை அமைச்சர் கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தி.மு.க., துணை செயலாளர் மணிவேல், இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.