தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மைதானத்தில் புதிய கட்டுமான பணி: பா.ம.க.,வினர் தடுத்ததால் பரபரப்பு

 மைதானத்தில் புதிய கட்டுமான பணி: பா.ம.க.,வினர் தடுத்ததால் பரபரப்பு

 மைதானத்தில் புதிய கட்டுமான பணி: பா.ம.க.,வினர் தடுத்ததால் பரபரப்பு


ADDED : செப் 22, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதிய கடைகள் கட்டுமான பணியை பா.ம.க., வினர் தடுத்து நிறுத்தினர். கடலுார் மாநகராட்சி சார்பில் ரூ.14.15 கோடி மதிப்பில் மஞ்சக்குப்பம் மைதானத்தை சுற்றிலும் 110 கடைகள் கட்டுமான பணி துவங்கப்பட்டது.

இதனால் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் கட்டுமான பணிக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதால், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாதி கட்டுமான பணியுடன் நிற்கும் கடைகளை மீண்டும் கட்டலாம் எனவும், கூடுதலாக கட்டுமான பணி மேற்கொள்ளக் கூடாது என, கோர்ட் உத்தரவிட்டது.

இதனால் மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைதானத்தில் காங்., அலுவலகம் எதிரில் புதிய கடைகள் கட்ட பணிகள் நடந்து வருகிறது. கோர்ட் உத்தரவை மீறி கட்டுமான பணிகள் நடைபெறுவதாக கூறி நேற்று பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியை தடுத்தி நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us