ADDED : பிப் 02, 2026 03:44 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: கடலுார் மாவட்டத்தின், டென்னிஸ் அசோசியேஷன் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நெடுஞ்சேரி புத்துாரில் உள்ள லக்ஷ்மி விலாஸ் விடுதியில் நடந்தது.
இதில், கடலுார் டென்னிஸ் சென்டர், பரங்கிப்பேட்டை பி.எம்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப், காட்டு மன்னார்கோவில் கிளப், சிதம்பரம் மார்னிங் கிளப், சாரதாராம் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ராஜா முத்தையா கிளப் மற்றும் ஸ்போர்ட்டிங் சாலம்ர்ஸ் கிளப் ஆகிய டென்னிஸ் கிளப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அதில், மாவட்ட சங்கத்தின் புதிய பொறுப்பாளர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், மாவட்ட தலைவராக சுவேதகுமார், செயலாளராக சுந்தரேசன், பொருளாளராக ராஜேஷ்துகார் பொறுப்பேற்றனர்.
மேலும், கூட்டத்தில் 'திட்டம் 2026' என்ற பெயரில் நடத்த வேண்டிய விளையாட்டுக்கள் தீர்மானிக்கப்பட்டன.
