/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய கே.எம்.என்., பார்ட்டி ஹால் அண்ணாகிராமத்தில் திறப்பு
/
புதிய கே.எம்.என்., பார்ட்டி ஹால் அண்ணாகிராமத்தில் திறப்பு
புதிய கே.எம்.என்., பார்ட்டி ஹால் அண்ணாகிராமத்தில் திறப்பு
புதிய கே.எம்.என்., பார்ட்டி ஹால் அண்ணாகிராமத்தில் திறப்பு
ADDED : பிப் 01, 2025 12:15 AM

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமத்தில் கே.எம்.என்., பார்ட்டி புதிய ஏசி ஹாலை, முன்னாள் அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.
பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், கே.எம்.என்.பார்ட்டி புதிய ஏசி.,ஹால் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகபூஷணம், அவரது மனைவி ரமணி, மகள் டாக்டர் பிரித்திகா, பல் டாக்டர் பிரவீன் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் சம்பத் பார்ட்டி ஹாலை திறந்து வைத்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் மகன் பிரவீன், அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் குமார், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், கடலுார் ஒன்றிய செயலாளர் காசிநாதன், முன்னாள் துணை சேர்மன் சம்பந்தம், பகுதி செயலாளர் கந்தன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ராமசாமி, பண்ருட்டி நகர துணை செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் பக்கிரி, கவுரிபாண்டியன், தொழில்பிரிவு செயலாளர் சுந்தர், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஆனந்தன், ஒன்றிய அவைத் தலைவர் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி பீர்பால், ஒன்றிய பொறுப்பாளர் ரஜினி, பொருளாளர் எழுமலை, மணிகண்டன், கண்மணி, மகாதேவன், ராஜேந்திரன், கணேசன், கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.