ADDED : மே 21, 2026 08:25 AM

வடலுார்: நியூ கிருஷ்ணா பேக்கரி மற்றும் சுவீட்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக வடலுார், நெய்வேலி, கடலுார் கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பேக்கரி உணவை, தரமாக வழங்கி வருகின்றனர்.
வடலுார், நியூ கிருஷ்ணா பேக்கரி நிறுவனத்தின் சார்பில், புதிய கடை திறப்பு விழா, பஸ் நிலைய புதிய கட்டடத்தில் நேற்று நடந்தது.
வடலுார் வர்த்த சங்க செயலாளர் தனசேகர் வரவேற்றார். வர்த்தக சங்க மாநிலத் துணை தலைவர் ராஜ மாரியப்பன் முன்னிலையில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நியூ கிருஷ்ணா பேக்கரி கடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வர்த்த சங்க வடலுார் தலைவர் கலைச்செல்வன், எஸ்.பி.ஏ ஜவுளிக்கடை ஆறுமுகம், துணை தலைவர் சந்திரகாசன், துணை செயலாளர் ஞானசேகர், கோதண்டபாணி, சங்க பொருளாளர் வெங்கடேசன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர், நியூ கிருஷ்ணா பேக்கரி நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். வழங்கினர். டாக்டர் சரண்ராஜ் நன்றி கூறினார்.
