ADDED : நவ 06, 2025 05:22 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மருந்தாக்கவியல் துறை முன்னாள் மாணவர்கள் சார்பில் புதிய ஆய்வகம் திறக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த, 1994-1998 மருந்தாக்கவியல் முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட, புதிய ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
புதிய ஆய்வகம் அர்ப்பணிப்பு விழாவிற்கு, மருந்தாக்கவியல் துறை தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பல்கலை துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி பங்கேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துறைத்தலைவர் ஜானகிராமன், முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தனபால், முன்னாள் மாணவர்கள் கிளிமொழி, எழிலன், பேராசிரியர்கள் கண்ணப்பன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

