/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய ஊராட்சி அலுவலகம் கோ.பூவனுாரில் திறப்பு
/
புதிய ஊராட்சி அலுவலகம் கோ.பூவனுாரில் திறப்பு
ADDED : டிச 31, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுாரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 30 லட்சம் ரூபாயில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் செந்தில்முருகன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் தனலட்சுமி சிவராமன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதில், ஊராட்சி உறுப்பினர்கள் கோவிந்தராஜிலு, சுமதி, கமலா, அழகம்மாள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சிவராமன், புருஷோத்தமன், பிரபு, சத்யராஜ், பட்டுசாமி, ஒப்பிலாமணி உடனிருந்தனர்.
உறுப்பினர் வீரமுத்து நன்றி கூறினார்.