ADDED : பிப் 14, 2026 03:59 AM

கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பத்தி ல் எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
கடலு ார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அய்யப்பன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 17 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் விக்ரமன், சிறுபான்மை பிரிவு ஷாநவாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணன், சக்திவேல், தாசில்தார் ஜெயக்குமார், திருவந்திபுரம் தொடக்க கூட்டுறவு வங்கி செயலாட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
