ADDED : பிப் 27, 2026 05:13 AM

சேத்தியாத்தோப்பு: -: சின்னநற்குணம் ஊராட்சியில் புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த திறப்பு விழாவிற்கு, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கிளை செயலாளர் மகேஷ், ஒன்றிய மகளிரணி இலக்கியா, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஜெயசீலன், ஒன்றிய பொருளாளர் சங்கரநாராயணன், முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், துணை செயலாளர் பிரித்திவி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் ராஜா சாமிநாதன், மணிகண்டன், கார்த்தி. பா.ம.க., நிர்வாகி ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

