ADDED : மார் 15, 2026 03:56 AM

கடலுார்: புதிய ரேஷன் கடை கட்டத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி புதிய ரேஷன் கடையை துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ.,க்கள் பார்த்திபன், ராமச்சந்திரன், ராஜவேலு, தி.மு.க.,கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் விக்ரமன், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆதிபெருமாள், ஒன்றிய இளைஞரணி கவாஸ்கர், ஒன்றிய விளையாட்டுமேம்பாட்டு அணி தலைவர் சிவகுரு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, முன்னாள் ஊராட்சிதலைவர்கள் சுதாகர், முத்துக்குமாரசாமி, நகர் நல சங்கம் வேணுகோபால், சிங்காரம், ஊராட்சிசெயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
