/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் பாழ்
/
புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் பாழ்
ADDED : டிச 18, 2025 06:59 AM

நடுவீரப்பட்டு: அரசு துணை சுகாதாரநிலைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், காமாட்சிபேட்டையில் கட்டப்பட்டிருந்த அரசு துணை சுகாதாரநிலைய கட்டடம் பழுதடைந்தது.
இதனால் கிராம செவிலியர் பணி செய்ய இடம் இல்லாமல் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் பட்டீஸ்வரத்தில், ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதாரநிலைய கட்டடத்தை கட்டினர். இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.
இதனால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கட்டடடத்தினை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

