/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயன்பாட்டிற்கு வந்த புதிய தார் சாலை
/
பயன்பாட்டிற்கு வந்த புதிய தார் சாலை
ADDED : ஜன 10, 2026 06:49 AM

நெய்வேலி ஜன. 9-: என்.எல்.சி.,யில் சாம்பல் லாரிகள் செல்ல, புதிய தார் சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
என்.எல்.சி., அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு சாம்பல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்புவதற்கும், சிமென்ட் ஆலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் இந்த கழிவு சாம்பலை கொண்டு செல்வதால் அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர். இந்நிலையில் என்.எல்.சி., நிறுவனம் சார்பில், சாம்பல் லாரிகளின் போக்குவரத்து வசதிக்காக ரூ. 4 கோடி மதிப்பில், புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் சாம்பல் லாரிகளை என்.எல்.சி., மின்துறை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

