/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மு.அகரம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
/
மு.அகரம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : மார் 14, 2024 11:35 PM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த மு.அகரம் கிராமத்தில் உள்ள இருளர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், இந்த பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் பிரச்னை இருந்து வந்தது.
இதன்காரணமாக, ரூ.6 லட்சம் மதிப்பில், 11 கே.வி.திறன் கொண்ட, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் கோட்ட மின் செயற்பொறியாளர் சுகன்யா தலைமை தாங்கி, புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார்.
இதில், உதவி செயற்பொறியாளர் பாரதி, உதவி மின் பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்பாபு, மங்கலம்பேட்டை மின் வாரிய பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

