/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காந்தி மன்றத்தில் புத்தாண்டு விழா
/
காந்தி மன்றத்தில் புத்தாண்டு விழா
ADDED : ஜன 07, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் காந்தி மன்றத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடந்தது.
வாகீச நகரில் நடந்த விழாவிற்கு காந்தி மன்ற தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜானகிராமன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் லோகராஜன் சிறப்புரையாற்றினார். சி முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் ராயப்பன் கிறிஸ்துமஸ் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
காந்தி மன்ற உறுப்பினர்கள் சிவராமசேது, சின்னதுரை, லட்சுமணன், ஆசிரியர் யோகேஷ், சிதம்பரம் காதி கிராப்ட் செயலாளர் செந்தில்குமார், புலவர் அருள்பிரகாசம், சந்திரமவுலி, வனஜா தில்லைநாயகம், கலியபெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழரசி சேகர் நன்றி கூறினார்.

