/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் புத்தாண்டு தரிசனம்
/
ராகவேந்திரர் கோவிலில் புத்தாண்டு தரிசனம்
ADDED : ஏப் 14, 2025 11:52 PM

புவனகிரி,; தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு தரிசனம் நடந்தது.
புவனகிரி மருதுாரில் வள்ளலார் அவதார இல்லம், கிருஷ்ணாபுரம் வள்ளலார் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அகவற்பா பாடியதுடன் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை முழக்கமிட்டனர். பின்னர் தியானம் செய்தனர்.
புவனகிரியில் ராகவேந்திரர் பிறந்த இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டு சுவேத நதி தீர்த்தத்துடன், மந்தராலய மரபின் படி பல்வேறு நறுமணப்பொருட்கள் மற்றும் திரவங்களை கொண்டு அபிேஷக ஆராதனை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு காலையில் இருந்து, பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.