/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான்: சிதம்பரம் எம்.எல்.ஏ., ஆருடம்
/
அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான்: சிதம்பரம் எம்.எல்.ஏ., ஆருடம்
அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான்: சிதம்பரம் எம்.எல்.ஏ., ஆருடம்
அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான்: சிதம்பரம் எம்.எல்.ஏ., ஆருடம்
ADDED : அக் 14, 2024 11:17 PM

சிதம்பரம் : தமிழகத்தில். அடுத்த ஆட்சி, சத்தியமாக அ.தி.மு.க., ஆட்சிதான், எடப்படிதான் முதல்வர் என சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் பேசினார்.
சிதம்பரம் நகர அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர அவை தலைவர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார், மாவட்ட அவைத் தலைவர் குமார் துவக்குவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், நகர பொருளாளர் மருதவாணன், நகர துணை செயலாளர் பானுமதி, கவுன்சிலர் சித்ரா, இணை செயலாளர் பேபி, மாவட்ட பிரதிநித நாகராஜன், புவனேஸ்வரி, செல்லப்பா முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில். வரும் 17 ம் தேதி கட்சியின் துவக்க விழாவில். அந்தந்த பகுதியில் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வேண்டும். அ.தி.மு.க., வை எதிரிகளிடம் இருந்தும், துரோகிகளிடம் இருந்தும் கட்சியை மீட்டவர் பழனிசாமி அவர் தலைமையில் மீண்டும் ஜெ., ஆட்சி தொடர இன்றே நம் பணியை துவங்க வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து தேர்ல் பணியை துவங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் என்றாலம் சட்டசபை தேர்தல் ஆனாலம் சரி. சத்தியமாக, அடுத்த ஆட்சி அ.தி.மு.க., ஆட்சிதான் என பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.