நெய்வேலி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் பிரசாரம்
நெய்வேலி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் பிரசாரம்
ADDED : ஏப் 01, 2026 03:55 PM

அ நிறம் | அளவு
நெய்வேலி: நெய்வேலி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் பிரசாரம் செய்தார்.
நெய்வேலி தொகுதியில் 3வது முறையாக தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர், நேற்று கீழ்மாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட முத்தரசன்குப்பம் கிராமத்தில் பிரசாரத்தை துவக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
தி.மு.க., மட்டுமின்றி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர். கிராம மக்கள் மட்டுமின்றி இளைஞர்கள் தி.முக., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர். வரும் 21ம் தேதி வரை நெய்வேலி தொகுதிக்குட்பட்ட அனைத்து நகரம் மற்றும் கிராமங்களில் தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலை பின்பற்றி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக சபா ராஜேந்திரன் கூறினார்.
