/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி தி.மு.க.,வினர் பொங்கல் கொண்டாட்டம்
/
நெய்வேலி தி.மு.க.,வினர் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 04:39 AM

நெய்வேலி: நெய்வேலி நகரில் தி.மு.க.,வினர் கொடியேற்றி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் நகர தி.மு.க.,வினர், தொழிற்சங்கத்தினர், இளைஞரணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, நகரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பண்ருட்டி ஒன்றிய குழு சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, என்.எல்.சி., தொ.மு.ச., தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, நகர அவைத்தலைவர் நன்மாற பாண்டியன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம், பொருளாளர் மதியழகன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், நாசர், இளங்கோ மற்றும் நகர துணை செயலாளர்கள், தொ.மு.ச., நிர்வாகிகள் பங்கேற்றனர்.