/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி ஜெயப்பிரியா பள்ளி ஆண்டு விழா
/
நெய்வேலி ஜெயப்பிரியா பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 30, 2024 06:19 AM

மந்தாரக்குப்பம் : நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பப்பளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஜெயப்பிரியா பள்ளி குழும நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் சிந்து வரவேற்றார். முதல்வர் பிந்து ஆண்டறிக்கை வாசித்தார். ஜெயப்பிரியா கல்வி குழுமங்களின் இயக்குநர் அனிதா ஜெய்சங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்விக் குழுமத்தின் அனைத்து பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஜெயப்பிரியா கல்விக் குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராமன்குமாரமங்கலம், நிர்வாக அலுவலர் சரண்யா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.