/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டர் சட்டத்தில் நெய்வேலி ரவுடி கைது
/
குண்டர் சட்டத்தில் நெய்வேலி ரவுடி கைது
ADDED : அக் 26, 2024 06:31 AM
கடலுார்: நெய்வேலியில் வீடு புகுந்து திருடுவதற்காக சதி திட்டம் தீட்டிய ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி, தர்மல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தர்மல் பவர் ஸ்டேஷன் 1 அருகில் பதுங்கி இருந்த சுந்தர மூர்த்தி மகன் அய்யப்பன், 24; மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருடுவதற்கு சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. உடனே போலீசார் அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது தர்மல் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் இருந்ததால் அவருக்கு ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கும் நிலுவையில் இருந்தது.
இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலுார் எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஒரு ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அய்யப்பன் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.