/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஈட்டி எறிதலில் பதக்கங்களை குவிக்கும் நெய்வேலி மாணவர்
/
ஈட்டி எறிதலில் பதக்கங்களை குவிக்கும் நெய்வேலி மாணவர்
ஈட்டி எறிதலில் பதக்கங்களை குவிக்கும் நெய்வேலி மாணவர்
ஈட்டி எறிதலில் பதக்கங்களை குவிக்கும் நெய்வேலி மாணவர்
ADDED : மார் 27, 2025 04:31 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி விளையாட்டு பள்ளி மாணவர், ஈட்டி எறிதலில் தங்க பதக்கங்களை குவித்து வருகிறார்.
நெய்வேலி என்.எல்.சி., விளையாட்டு விடுதி பள்ளியில் தங்கி படிப்பவர் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் பிரதீப், 17; ஈட்டி எறிதல் போட்டியில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்.
இவர், 17 வயதிற்குட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அளவில் நடந்த போட்டியில் 59.14 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் பெற்று புதிய சாதனை படைத்தார். அடுத்து, தென்னிந்திய அளவில் நடந்த ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, கேரளா, லட்சத்தீவு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற போட்டியில் 69.43 மீட்டர் துாரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இதுபோன்ற தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்.
சாதனை மாணவர் கூறுகையில், என்.எல்.சி., விளையாட்டு பள்ளியில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் என்.எல்.சி., நிர்வாகம் செய்து கொடுக்கிறது. பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்கம் பல்வேறு சாதனைகளை படைக்க முடிந்தது. ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவை முன்மாதிரியாக கொண்டு பயிற்சி செய்து வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் பெறுவதே லட்சியம் என தெரிவித்தார்.