ADDED : செப் 21, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரை பாதாளகாளி கோவிலில் பிரத்தியங்கரா தேவி சன்னதி உள்ளது. இங்கு, புரட்டாசி மாத அமாவாசையையொட்டி நேற்று மதியம் பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் யாக வேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பாதாள காளிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடு ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.