தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., - தொ.மு.ச., ஆலோசனை கூட்டம்

 என்.எல்.சி., - தொ.மு.ச., ஆலோசனை கூட்டம்

 என்.எல்.சி., - தொ.மு.ச., ஆலோசனை கூட்டம்


ADDED : ஜன 05, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: என்.எல்.சி., - தொ.மு.ச., சொசைட்டி தொழிலாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25 ல் உள்ள என்.எல்.சி., - தொ.மு.ச., அலவலகத்தில் என்.எல்.சி., நிறுவனத்தில் பணியாற்றி வரும் சொசைட்டி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தொ.மு.ச., தலைவர் ஞான ஒளி தலைமை தாங்கினார். பொருளாளர் அப்துல் மஜீத், அலுவலக செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

தொ.மு.ச., கான்ட்ராக்ட் சங்க குழு தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். கூட்டத்தில் என்.எல்.சி., - தொ.மு.ச., பொதுச் செயலாளர் குருநாதன் பேசுகையில், என்.எல்.சி., சொசைட்டி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து, என்.எல்.சி., அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் சார்பில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மற்றும் மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப்பை சந்தித்து 2024- -2025ம் ஆண்டு பணிபுரியும் சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

அதனடிப்படையில், விரைவில் சொசைட்டி தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும். பணி நிரந்தரம் பெற்று தருவதற்கு தொ.மு.ச., சார்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டத்தில் காண்ட்ராக்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஜெகதீசன், பரமசிவம், ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான சொசைட்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us