/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் உற்பத்தியில் பாதிப்பில்லை : என்.எல்.சி., நிர்வாகம் தகவல்
/
மின் உற்பத்தியில் பாதிப்பில்லை : என்.எல்.சி., நிர்வாகம் தகவல்
மின் உற்பத்தியில் பாதிப்பில்லை : என்.எல்.சி., நிர்வாகம் தகவல்
மின் உற்பத்தியில் பாதிப்பில்லை : என்.எல்.சி., நிர்வாகம் தகவல்
ADDED : அக் 23, 2025 06:52 AM
நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நெய்வேலி என்.எல்.சி., நகர நிர்வாக அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறை எண் 36ல் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட துவங்கி உள்ளது.
இந்த மையத்தை, மழையால் பாதிக்கப்பட்டவர்கள், தொலைபேசி எண்கள்: 79000 79001 மற்றும் 04142- 252396 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மழை பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களில் மேல்மண் மற்றும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டாலும், உற்பத்தி பணி நடந்து வருகிறது. சுரங்கங்களில் தேங்கும் மழை நீர், 31 ராட்சத மோட்டார்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அனல்மின் நிலையங்களுக்கு கன்வேயர் பெல்ட் வாயிலாக தொடர்ந்து நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது.
நிலக்கரி பெருமளவில் கையிருப்பு உள்ளதால் மின்உற்பத்தியில் பாதிப்பில்லை என, என்.எல்.சி., நிர்வாகம் தெரிவித்துள்ளது.