/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சேர்மனுக்கு ஒடிசாவில் விருது வழங்கல்
/
என்.எல்.சி., சேர்மனுக்கு ஒடிசாவில் விருது வழங்கல்
ADDED : ஏப் 05, 2025 07:45 AM

நெய்வேலி,: ஒடிசாவில் நடந்த விழாவில், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 'உத்கர்ஷ் ஒடிசா வணிக தலைமை விருதுகள்' வழங்கும் விழா நடந்தது.
பத்ம விபூஷண் விருது பெற்ற சுதர்சன் சாஹூ, புவனேஷ்வர் மேயர் சுலோச்சனா தாஸ் முன்னிலை வகித்தனர்.
ஜெய்ப்பூர் எம்.பி., ரவி நாராயண் பெஹெரா, என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டு பள்ளிக்கு, 'ஆண்டின் சிறந்த தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்' என்ற விருது வழங்கி பேசுகையில், ' ஒடிசாவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக மின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில், நாட்டின் நிலையான வளர்ச்சிக்கான முயற்சிகளை வழி நடத்துவதில், என்.எல்.சி., சேர்மன் சிறந்த பங்களிப்பு வழங்கியுள்ளார்' என்றார்.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், 'ஒடிசாவின் இயற்கை வளங்கள் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களில் அமைந்துள்ள தலபிரா 2வது மற்றும் 3வது நிலக்கரி சுரங்கங்கள் போன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
ஒடிசாவின் சம்பல்பூரில் 2400 மெகாவாட் திறன் கொண்ட என்.எல்.சி., தலபிரா அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் பிரதமர் மோடி.
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் அமையவுள்ள மச்சகட்டா மற்றும் நியூ பத்ரபாரா தெற்கு சுரங்கங்கள் என 2 புதிய நிலக்கரி சுரங்கங்களை என்.எல்.சி., கையகப்படுத்தியுள்ளது.
சுரங்கப் பணிகள் நிறைவுற்ற பகுதிகளில் சூரிய சக்தி மற்றும் நீர் உந்து மின்திட்டங்கள் போன்ற மறு உபயோக திட்டங்களின் சாத்தியங்களை கண்டறியும் முயற்சியில், என்.எல்.சி., ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.
நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, கனிம வளங்களை பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டியதன் அவசியமாகும்' என்றார்.