/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உ.பி.,யில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவக்கம் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
/
உ.பி.,யில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவக்கம் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
உ.பி.,யில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவக்கம் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
உ.பி.,யில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவக்கம் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
ADDED : டிச 14, 2024 03:59 AM

நெய்வேலி: உத்திரபிரதேசத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி துவங்கியுள்ளதாக அந்நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி., நிறுவனம், உத்திரபிரதேசத்தில் 660 மெகாவாட் கதம்பூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகு, சோதனை அடிப்படையிலான மின் உற்பத்தியை கடந்த 7ம் தேதி வெற்றிகரமாக முடித்து, 12ம் தேதி வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கியது. சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட முதல் அனல் மின் நிலையம் என்கிற வகையில், என்.எல்.சி., நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல் ஆகும்.
இந்த மின் நிலையம், நெய்வேலி உத்தரப்பிரதேச பவர் லிமிடெட் - என்.எல்.சி., மற்றும் உத்திரப்பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், புதை படிவ எரிபொருள்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அனல் மின் நிலையம் என்பதால், இந்த 660 மெ.வாட் திறன் அதிகரிப்பு புதிய சாதனையாகும்.
என்.எல்.சி., மற்றும் அதன் குழும நிறுவனங்களின் மொத்தம் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 6,071 மெகாவாட்டில் இருந்து 6,731 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
இச்சாதனை குறித்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி கூறுகையில், 'என்.எல்.சி.,யின் இந்த முதல் சூப்பர் கிரிட்டிகல் மின் உற்பத்தி நிலையம் கதம்பூரில் செயல்படுத்தப்பட்டிருப்பது, இந்தியாவின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அதிநவீன, எரிசக்தி திறன் மிக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குமான உறுதிப்பாட்டை நிருபிக்கிறது.
இந்த தொழில்நுட்பமானது, குறைந்த கார்பன் உமிழ்வு, அதிக வெப்ப செயல்திறன் மற்றும் நிலையான எரிசக்தி எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. எரிசக்தித் துறையில், தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மீதமுள்ள அலகுகளை செயல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டில் என்.எல்.சி., நிறுவனம் உறுதியாக உள்ளது' என்றார்.