/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., மின்உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தப்படும் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்

ADDED : ஜன 27, 2025 05:05 AM

நெய்வேலி : என்.எல்.சி.,யின் தற்போதைய 6,731 மெகாவாட் மின் உற்பத்தி, 2030 ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தப்படும் என, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தேசிய கொடியை ஏற்றிவைத்து, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசியதாவது:
என்.எல்.சி., நிறுவனத்தின், தற்போதைய மொத்த மின் உற்பத்தி திறன் 6,731 மெகா வாட்டாகவும், மொத்த சுரங்கத்திறன் ஆண்டுக்கு 50.1 மில்லியன் டன்களாகவும் உள்ளது.
2030ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தித் திறனை 20,000 மெகாவாட்டிற்கும், மொத்த சுரங்கத்திறனை ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களாகவும் உயர்த்த திட்டங்கள் உள்ளது.
2024- 25ம் ஆண்டில் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் மூலம், கடலுார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 கோடி திட்ட மதிப்பீட்டில் உதவிகள் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
மாவட்டத்தில் ரூ. 3.56 கோடியில் குடிநீர் திட்டங்கள், திட்டக்குடி சிறுமுளை கிராமத்திற்கு அருகில் பெரிய ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளது.
மேலும், 25 கிராமங்களில் ரூ. 2 கோடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், சுரங்கவியல் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்காக அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு, ரூ. 53.50 லட்சம் நிதியுதவி மற்றும் என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் வழங்கியவர்களை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மிக்க பயிற்சிகளுக்காக, தேசிய மின் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 76.91 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில், என்.எல்.சி., பள்ளிகளில் பயிலும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.